/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adsds_24.jpg)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது நாளாகதமிழகத்தில்கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. இன்று 25,092 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2,115 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 86 ஆயிரத்து 408 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால்இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டோர்54,449ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 16வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குகரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில்இதுவரை கரோனா பாதிப்பு 38,327 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் சென்னையில் அதிகபட்சமாக 529பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 41,பேரும் திருவள்ளூரில் 33 பேரும்உயிரிழந்துள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் 41 பேர் கரோனாவால்உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 26 பேரும், தனியார் மருத்துவமனையில் 15 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 1,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதேபோல் மொத்தமாக இதுவரை 30,271 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)