
தமிழகத்தில் ஏழாவது நாளாக 6 ஆயிரத்தைக் கடந்து இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6,393 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இன்று ஒரே நாளில் 58,818 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கரோனா செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,117 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 26 ஆவது நாளாக சென்னையில் 2 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு பதிவாகி வருகிறது. அதேபோல் சென்னையில் மொத்த பாதிப்பு என்பது 97,575 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 12,735 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் இன்று ஒரே நாளில் 5,927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 172, 883 பேர் குணமடைந்துள்ளனர் தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் படி தமிழகத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 54 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் கரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கும் உட்பட்ட 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அரியலூரில் கரோனா பாதிக்கப்பட்ட 22 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாகையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,741ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 60 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு பதிவாகி வருகிறது. உயிரிழப்பு சதவீதம் 1.59 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 2 ஆயிரத்தைக் கடந்து உயிரிழப்பு பதிவாகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,076 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 242 பேரும், திருவள்ளூரில் 226 பேரும் மதுரை 231, காஞ்சிபுரம் 106, விருதுநகர் 74, திருச்சியில் 60 என கரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இதுவரை 1,685 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இன்றும் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 5,309 பேருக்கு கரோனா பாதிப்பு ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் 540, காஞ்சிபுரம் 373, தூத்துக்குடி 316, விழுப்புரம் 138, திருச்சி 136, சேலம் 123, கடலூர் 120, நெல்லையில் 382, விருதுநகரில் 370, தஞ்சை 188, ராணிப்பேட்டை 182, திருவண்ணாமலை 177, கள்ளக்குறிச்சியில் 133, வேலூர் 105, கிருஷ்ணகிரி 104, புதுக்கோட்டை 81 என கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.