
தமிழகத்தில் இன்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,972 ஆக உள்ளது. 4-ஆவது நாளாக7,000-ஐநெருங்கி கரோனாபதிவாகியுள்ளது. இன்று தமிழகத்தில்59,584 பேருக்குகரோனாபரிசோதனை செய்யப்பட்டதில் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் இதுவரை 2,27,688 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று உறுதி செய்யப்பட்டவர்கள்6,908 பேர் தமிழகத்திலும், மற்றவர்கள் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,107 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தமாக கரோனாஉறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 96,438 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு 57,073 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,66,959 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர்விகிதம் 73.32 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 4,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 88 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் 65 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கும் உட்பட்ட 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாஉயிரிழப்பு எண்ணிக்கை என்பது 3,659 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 59-ஆவது நாளாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக 2,056 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 239, திருவள்ளூரில் 222,காஞ்சிபுரம் 100,மதுரை 222, ராமநாதபுரம் 59,திருச்சி 60 எனகரோனாஉயிரிழப்பு உள்ளது. சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இதுவரை கரோனாவிற்கு 1,603 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இன்றும்ஒரே நாளில் 5 ஆயிரத்தைக் கடந்து கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இன்று 5,865 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.விருதுநகரில் இன்று ஒரே நாளில் 577 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை256, திருவள்ளூர் 486, மதுரை 345, ராணிப்பேட்டை 198, கள்ளக்குறிச்சி 195, சேலம் 124, திண்டுக்கல் 114 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)