தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில்6,988 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனாசெய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டுலட்சத்தை கடந்திருக்கிறது. சென்னையில் மேலும் 1,329 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 22-வது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாககரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தமாக 93,537 பேருக்கு இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 2,06,737 பேருக்குஇதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரே நாளில் 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களைவிட,குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர்எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 73.06 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி,இதுவரை இல்லாத அளவாக89 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு மருத்துவமனைகளில் 66 பேரும்,தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கரோனாவால்20 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இதுவரை 1,989 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 222 பேரும், திருவள்ளூரில் 199 பேரும், காஞ்சிபுரம் 56, மதுரை 202, ராமநாதபுரம் 55, திருச்சியில் 57 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் 1,420 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனாஉயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 3,409 அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு சதவீதம் என்பது தமிழகத்தில் 1.64 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் ஐந்தாயிரத்தைகடந்து கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 5,659 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றாவது நாளாக ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக, சென்னை அல்லாதபிற மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 449, காஞ்சிபுரம் 442, திருவள்ளூர் 385,விருதுநகர் 376, மதுரை 301,கோவை 270,திருச்சி 199, சேலம் 112, புதுக்கோட்டை 110,தென்காசியில்99பேருக்கும் இன்றுகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.