தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,979 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் 4,902 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் தமிழகம் வந்தவர்கள். இன்று ஒரே நாளில் 51,640பேருக்குகரோனா பரிசோதனை செய்யப்பட்டதில்4,979 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கரோனாஉறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,294 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 4,059 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர்எண்ணிக்கை 1,17,915 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோர்விகிதம் என்பது 69.08 சதவீதமாக உள்ளது.
சென்னையில் மேலும் 1,254 பேருக்கு இன்று ஒரே நாளில்கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 16ஆவது நாளாக சென்னையில் இரண்டாயிரத்துக்கும் குறைவாககரோனாபதிவாகியுள்ளது.அதேபோல் சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு என்பது 85,859 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 78 பேர் உயிரிழந்துள்ளனர்.அதில் அரசு மருத்துவமனைகளில் 55 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்த நிலையில்மொத்தஉயிரிழப்பு எண்ணிக்கை என்பது 2,481 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.45 சதவீதமாக உள்ளது. வேறு நோய் பாதிப்பு இல்லாத மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 50 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் கரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,434 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் 194 பேரும், திருவள்ளூரில் 159, ராமநாதபுரத்தில் 48,திருச்சியில் 35, காஞ்சிபுரம் 66,மதுரை 155 பேரும்இதுவரைஉயிரிழந்துள்ளனர்.சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,047 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் இன்று ஒரே நாளில் 3,725 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக3 ஆயிரத்திற்கு மேலாக கரோனாபதிவாகிவருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில்405 பேருக்குகரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 306, காஞ்சிபுரம் 226, தூத்துக்குடி 151, திருவண்ணாமலை 134, கன்னியாகுமரி 131,தேனி 120, ராமநாதபுரம் 125, விருது நகரில் ஒரே நாளில் 265 பேருக்குகரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.கோவை 135,வேலூர் 133,நெல்லை 130,சிவகங்கை 93,நீலகிரி 78,தர்மபுரி 77,சேலம் 60,தென்காசி 77,புதுக்கோட்டை 72, ராணிப்பேட்டை 65 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.