
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,514 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 ஆவது நாளாக தமிழகத்தில் முன்பை விட குறைந்த பாதிப்பு தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னையில் ஒரே நாளில் 2,467 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 58 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சம் என்று இருந்த நிலையில் தற்பொழுது 2,96,131 ஆக குறைந்துள்ளது. அதேபோல் இன்று 31,673 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 18,02,176 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 490 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 292 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 198 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 24,722 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,332 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 1,653 பேருக்கும், திருப்பூரில் 1,338 பேருக்கும், சேலத்தில் 1,140 பேருக்கும், செங்கல்பட்டில் 1,106 பேருக்கும் இன்று ஒரேநாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.