இதுவரை இல்லாத அளவிற்கு கரோனா உயிரிழப்பு!!! தமிழகத்தில் மீண்டும் உச்சத்தை தொட்ட கரோனா பாதிப்பு!!

corona

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,538 பேருக்குகரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாககரோனா உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை என்பது1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 47,539 பேருக்குகரோனா பரிசோதனை செய்யப்பட்டதில்,4,538 பேருக்குகரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள்4,463 பேர், மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள்.

அதேபோல் இன்று ஒரே நாளில் சென்னையில் 1,243 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு என்பது 83,377 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் ஒரே நாளில் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர்எண்ணிக்கை 1,10,807 ஆகஅதிகரித்துள்ளது.அதேபோல் தற்பொழுது வரை மருத்துவமனைகளில்47, 552 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில்56 பேரும், தனியார் மருத்துவமனைகளில்23 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் வேறு நோய் தொற்று பாதிப்பு இல்லாத ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இன்று ஒரே நாளில் சென்னையில் அதிகபட்சமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர்.48-ஆவதுநாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை என்பது தொடர்ந்து வருகிறது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 2,315 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,376 ஆக அதிகரித்துள்ளது.சென்னையை அடுத்துசெங்கல்பட்டில் 184 பேரும், திருவள்ளூரில்147 பேரும்,காஞ்சிபுரம் 59,மதுரை 138, ராமநாதபுரம் 43, திருவண்ணாமலையில் 30 பேர் என உயிரிழந்தோர்எண்ணிக்கை உயர்ந்துள்ளது.அதேபோல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 939 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,295 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 263 பேருக்குகரோனா இன்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் 163, திருவண்ணாமலை 145, சிவகங்கையில் 81, புதுக்கோட்டையில் 75, தென்காசியில் 65,சேலத்தில் 57, ராணிப்பேட்டை 55,நீலகிரி 52 ,கடலூரில் 44பேருக்கு ஒரே நாளில்கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் விருதுநகரில் 196 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 220, தூத்துக்குடி 189,வேலூர் 153,தேனி 175, தஞ்சையில் 117,திருச்சியில் 100, ராமநாதபுரத்தில் 82 பேருக்குஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe