இன்று தமிழகத்தில் 1,974 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 15 ஆவது நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி உள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,940 பேர் தமிழகத்தையும்,மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இன்று மேற்கொள்ளப்பட்ட 18,627 சோதனைகளில் 1,974 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 44,661 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து 15 ஆவது நாளாக இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. அதே போல் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 31,896 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 1,138 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 24,547 பேர் கரோனாலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் 19,676 தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று உயிரிழந்தவர்களில் 7 பேர் வேறு எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் கரோனாவினால்மட்டும் உயிரிழந்துள்ளனர். 38 பேரில்,22 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். அதேபோல்இன்று ஒரே நாளில் உயிரிழந்த 38 பேரில் 31 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.