1,200க்கு கீழ் ஒருநாள் உயிரிழப்பு... இந்திய கரோனா நிலவரம்!

Today corona rate in india

இந்தியாவில் இதுவரை 3.01 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (26.06.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 3,01,83,143 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 48,698 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில்64,818 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,93,085 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.66 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.31 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 1,183 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,94,493 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 5,95,565 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை இந்தியாவில் 40.18 கோடி பேருக்கு கரோனாமாதிரிகள்பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது.

corona virus India
இதையும் படியுங்கள்
Subscribe