ADVERTISEMENT

சென்னையில் குறைந்தது கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை!

10:34 PM Oct 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்றும் 6 ஆம் நாளாக 5 ஆயிரத்திற்கு குறைவாக 4,295 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,83,486 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 40,192 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,132 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 24-வது நாளாக 1,000-க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,88,994 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 88,574 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3,504 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. சென்னையில் பொதுமுடக்கத்தின் பொழுது கரோனா கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருந்த நிலையில், ஊரடங்குக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க தொடங்கியது. தற்பொழுது 13,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து நாட்களுக்கு முன்பு சென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக 70 இடங்கள் இருந்த நிலையில், தற்போது 28 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாக தண்டையார்பேட்டையில் எட்டு பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT