/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adsds_23.jpg)
தமிழகத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு 2,174பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டோரில்தமிழகத்தில் 2,094 பேரும் மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இன்று 24,621பேருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கரோனாஉறுதிசெய்யப்பட்டோர்எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல்17 நாட்களாக ஆயிரத்தை தாண்டியேகரோனாபதிவான நிலையில், இன்று இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை 35,556 பேருக்கு கரோனாபாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,276 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் சென்னையிலும் 14வது நாளாக கரோனா பாதிப்பு ஆயிரம் என்ற நிலையில் தொடர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் கரோனாவால் இதுவரை அதிகபட்சமாக 467 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அறிவிக்கப்பட்டுள்ள உயிரிழப்பு48. அரசு மருத்துவமனையில் 38 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும்கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 18 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் கரோனாஉயிரிழப்பு எண்ணிக்கை என்பது தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.அதேபோல் இன்று ஒரே நாளில் 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 27,624பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல் கரோனா பாதிக்கப்பட்டுராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் பாலமுரளி சிகிச்சை பலனின்றி தற்போதுஉயிரிழந்துள்ளார். சென்னை காவல்துறையில் இதுவரை 731 போலீசார்கரோனாவால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 278 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக காவல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)