Advertisment

இன்று பட்ஜெட் தாக்கல்;ஓபிஎஸ், இபிஎஸ் வருகை!!

இன்று தமிழக அரசு பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது.

ஜனவரி 2 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடர் ஆரம்பித்தது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்று 8 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியின் பதிலுரையுடன் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

Advertisment

tngovt

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்றுதொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஓபிஎஸ் தாக்கல் செய்ய இருக்கிறார். 8 வது முறையாக அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கின்ற சூழலில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் இந்த பட்ஜெட்டில்நிறைய புதிய அறிவிப்புகள், சலுகைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

அதேபோல் இந்த அரசின் நிதிச்சுமை, வறட்சி, கோடநாடு விவகாரம்,ஸ்டெர்லைட், ஜாக்டோ ஜியோஎன பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.

budget ops_eps TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe