/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus-1_2.jpg)
வார இறுதி நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாட்கள் போன்ற விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் வழக்கத்தைவிட அதிகமானோர் மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச்சென்று திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன். அதேபோன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்ற இடங்களுக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதன் மூலம் தொலைதூர பயணம் மேற்கொண்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே போன்று ஞாயிற்றுக்கிழமையும் கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)