Advertisment

பெங்களூரிலிருந்து சென்னைக்குச் சொகுசு காரில் போதைப் பொருள் கடத்தல்

tobacco smuggling from Bengaluru to Chennai by luxury car

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி ஒரு சொகுசு கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, காரின் பின்புற இருக்கையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டைகளாக கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி சென்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அரவிந்த்ஜி(26), தசரத்சிங்(27) ஆகிய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 2.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை சேர்த்து பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த இரண்டு நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

police Tobacco Bengaluru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe