Skip to main content

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்கிற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்; இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

TNPSC issue other state people GO

 

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்கிற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர், மன்னார்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

"எங்கே எனது வேலை" என்கிற ஆவேச முழக்கத்துடன் மன்னார்குடி பெரியார் சிலை முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கூடினர். அங்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்கிற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியும், படித்த பட்டதாரி மாணவர்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணமாக மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மத்திய மாநில அரசுக்கு எதிராக ஆவேசமாகக் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்