டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் இரண்டு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் சென்னை திரு.வி.க நகரை சேர்ந்த விக்னேஷ் தலைமை செயலக அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்ததும். சுதாராணி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேட்டில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வரும் சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.