டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை கைது செய்தது சிபிசிஐடி காவல்துறை. மேலும்ஜெயக்குமாருடன் சேர்த்து குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 17 பேரும், குரூப் 2 ஏ முறைகேடு வழக்கில் 16 பேரும் கைதாகியுள்ளனர்.

Advertisment

tnpsc group 4, group 2a exams jayakumar egmore court

அதன் தொடர்ச்சியாக ஜெயக்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி சிபிசிஐடி காவலில் செல்ல சம்மதமா? என கேட்டதற்கு தவறு செய்யவில்லை என ஜெயக்குமார் கண்ணீர் விட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமாரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட சிபிசிஐடி மனு மீது இன்று மதியம் 02.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிதெரிவித்தார்.