டிஎன்பிஎஸ்சி குரூப் 4- புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடாக இடம் பிடித்தவர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி முதல் புதிய கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

tnpsc group 4 counselling new date announced

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிப்பார்ப்பு, கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கான தேதி, நேரம், விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு அழைப்பாணை தனியாக தபால் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பப்படமாட்டாது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் என உறுதி அளிக்க இயலாது. சான்றிதழ் சரிப்பார்ப்பு, கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது." இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

குரூப் 4 கலந்தாய்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

Chennai counselling group 4 exam tnpsc
இதையும் படியுங்கள்
Subscribe