Advertisment

‘டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு’- 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

tNPSC Group 2 exam 7.90 lakh people applied

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

Advertisment

அந்த வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூன் 20 ஆம் தேதி (20.06.2024) அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் விண்ணப்பதாரர்கள் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2327 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் நேற்று (20.07.2024) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

tNPSC Group 2 exam 7.90 lakh people applied

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 340 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

examination tnpsc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe