Skip to main content

டி.என்.பி.எஸ்.சிக்கு எதிராக போராட்டம்!  -தொடரும் குரூப்-1 தேர்வு முறைகேடு எதிரொலி!

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

 

குரூப்-1 தேர்வில் முறைகேடுகள் தொடர்ந்துகொண்டே இருப்பதால் கஷ்டப்பட்டும் படிக்கும் மற்றும் பணவசதி இல்லாத, ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் தமிழக அரசின் துணைக் கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட உயர்பதவிகளை பிடிக்கமுடியவில்லை. இதனால், லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளைக் கண்டித்து தனியார் பயிற்சிமைய இயக்குனர்களும் மாணவர்களும் வள்ளுவர் கோட்டத்தில்  2019 ஜூலை- 4 ந்தேதி வியாழக்கிழமையன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள். 

 

t

 

இது குறித்து, போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ள தமிழ்நாடு போட்டி தேர்வுகள் பயிற்சி நிறுவன கூட்டமைப்பு (அசோசியேஷன் ஆஃப் ஐ.ஏ.எஸ். அகடமிஸ் இன் தமிழ்நாடு) அமைப்பினர் நம்மிடம், “கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1   முதல்நிலை தேர்வில் 24   வினாக்கள் தவறுதலாக கேட்கப்பட்டுள்ளன என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகமே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. பொதுவாக, பல ஆண்டுகளாகவே டி.என்.பி.எஸ்.சி.  தேர்வுகளில்  குறிப்பாக குருப்  1  தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் உள்ளது.

 

இதனால்,  உடலை வருத்தி கஷ்டப்பட்டு படிக்கும் தேர்வர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், சமீப காலமாக  டி.என்.பி.எஸ்.சி  அமைப்பினால் நடத்தப்படக்கூடிய குருப் 1  உள்ளிட்ட அனைத்துத்  தேர்வுகளிலும் ஒரு வினா கூட தவறாக இல்லாமல் இல்லை. இதனால், அரசு வேலையை நம்பி படிக்கும் தேர்வர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.  யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். 

 


எனவே, டி.என்.பி.எஸ்.சி.   நிர்வாகத்தில்  வெளிப்படை தன்மை வேண்டியும், தேர்வர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டியும், டி.என்.பி.எஸ்.சி.  நிர்வாகத்தின் கவனத்தினை  ஈர்க்கும்  வகையில்   தமிழகம் முழுவதும் உள்ள போட்டி  தேர்வு பயிற்சி மைய  இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள்  மற்றும்  தேர்வர்களை  ஒருங்கிணைத்து அமைதியான  அறவழியில்  ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து,  முறைப்படி காவல் துறையிடம் அனுமதியும் பெற்றுள்ளோம். 

 

மேலும், சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற குரூப் 1  முதல்நிலை தேர்விலும் 26  வினாக்கள் தவறாக கேட்கப்பட்டன.  அப்போது, தேர்வர்கள் நடத்திய அமைதி அறவழிப்போராட்டத்தினால், தற்போது நடைபெற இருக்கும் மெயின் தேர்வினை அம்மாநில தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எனவே, டி.என்.பி.எஸ்.சி.  நிர்வாகத்தினால்  நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வினை ரத்து செய்தல், மற்றும் அனைத்து தேர்வுகளிலும் வெளிப்படைத்தன்மை வேண்டி நடைபெற இருக்கும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர நம் அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். எந்த காரணம் கொண்டும், அமைதி போராட்டத்தில் தனி நபர் தாக்குதல், தனி நபருக்கு எதிராக பேசுதல் கூடாது என்ற காவல் துறையின் அறிவுரையை அனைவரும் கடைபிடிக்க வேண்டுகிறோம்” என்றார்கள். அமைப்பின் தொடர்பு எண்கள்: 9840398093, 9443019087, 9791885670, 7550151584

 

நிர்வாக சீர்திருத்தத்துறை மானியக்கோரிக்கை வரும் சூழலில் இப்படியொரு போராட்டம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
              


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசுப் பணிக்கு 394 பேர் தேர்வு’ - டி.என்.பி.எஸ்.சி.  அறிவிப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
394 Candidates Selected for Govt Jobs says tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ச. கோபால சுந்தர ராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 16.02.2024 முதல் 07.03.2024 வரையிலான காலத்தில் இளநிலை வரைதொழில் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை) பதவிக்கு 219 நபர்களும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி- II) பணிகளில் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் நிலை - II, சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இளநிலை அறிவியல் அலுவலர் (தடயவியல் துறை) பதவிக்கு 29 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியல் ரத்து’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Cancel of the list of candidates for judicial posts High Court

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கீழமை உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 12 ஆயிரம் பேருக்கு கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் நிலை தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தி இருந்தது. இதனையடுத்து 2 ஆயிரத்து 544 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிவில் நீதிபதி 245 பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருந்தது. மேலும் இந்த பட்டியலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், “சிவில் நீதிபதி பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலில் இட ஒதுக்கீடு முறையில் குளறுபடி உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களைப் பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை. இதனால் மற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியன், ராஜசேகர் அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.