தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து 30- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதில் இடைத்தரகராக ஜெயக்குமாரும், சித்தாண்டியும் செயல்பட்டது தெரியவந்ததால், அவர்களின் இல்லங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டை ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரும் ஏற்கெனவே கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.