/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/VACCINEE333.jpg)
தமிழகத்தில் முதற்கட்டமாக 1.5 கோடி கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று (28/04/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவிலேயே அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த முதல் மாநிலம் தமிழகம். கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழக அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று வரை (27/04/2021) 55.51 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கெனமுதற்கட்டமாக, 1.5 கோடி கரோனா தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)