/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zdcADADADA.jpg)
விருதுநகர்பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த அய்யம்மாள், சுருளியம்மாள்,வேலுதாய், லட்சுமி, காளீஸ்வரி குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி உயிரிழந்தவர்கள்குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார்.வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அமைச்சர் மற்றும் ஆட்சியருக்குஉத்தரவிட்டுள்ளார்.அதேபோல் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தயாரிப்பாளர்கள் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல்வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)