Advertisment

மழைநீர் சூழ்ந்துள்ள தி.நகர் பேருந்து நிலையம்... (படங்கள்)

Advertisment

'புரெவி' புயல், கரையைக் கடந்துவிட்ட நிலையில், மன்னார் வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. நேற்றிரவு வரை மிதமான மழை பெய்த நிலையில்,அதிகாலை 05.30 மணிக்கு மேல் கனமழை கொட்டியது.

Advertisment

தென் மாவட்டங்களில் மழை கொட்டும் என எதிர்பார்த்த நிலையில் சென்னையிலும் பலத்த மழை பெய்துவருகிறது. சென்னையில் கனமழை காரணமாக, பல்வேறு முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின. சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில், மழைநீர்தேங்கியுள்ளது. இதனால், காலை வேலைக்குச் செல்பவர்கள்,பேருந்தில் பயணிப்பதற்காக,தி.நகர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, பெரும் அவதிக்குள்ளானர்.

rain t.nagar
இதையும் படியுங்கள்
Subscribe