2017- 2018, 2018- 2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் (16.12.2019) மடிக்கணினி வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களிடம் "Bonafied Certificate" பெற்றுக்கொண்டு மடிக்கணனி வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
அதேபோல் மடிக்கணினிகள் வழங்கியது போக, கூடுதலாக தேவைப்படின் அதன் விவரத்தை டிசம்பர் 17- க்குள் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கும், உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கும் மடிக்கணினி இல்லை என்று தமிழக பள்ளிக்கலவித்துறை தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.