Advertisment

ஜன.27 முதல் 10, +2 மாதிரி வினாத்தாள் விற்பனை!

பெற்றோர் ஆசிரியர் கழக வெளியீடான 10, 12- ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு ஜனவரி 27-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கட்டுமானப்பணி நடப்பதால் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இந்தாண்டு மாதிரி வினாத்தாள் விற்பனை இல்லை என்று கூறியுள்ளது. இதனால் சென்னை எம்எம்டிஏ அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாதிரி வினாத்தாள் ஜனவரி 27 ஆம் தேதி முதல் விற்பனையாகிறது. அதேபோல் சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியிலும், சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் மாதிரி வினாத்தாள் விற்பனையாகிறது.

tn schools 10th,12th sample questions book bank sale start on jan 27

மாதிரி வினாத்தாளுக்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ஒரே தொகுதியாக ரூபாய் 60- க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 12- ஆம் வகுப்புக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு தனித்தனியாக ரூபாய் 80- க்கு மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12- ஆம் வகுப்பு கணிதத்துக்கு வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் இணைத்தே ரூபாய் 80க்கு விற்கப்படுகிறது.

book banks sample questions students TN SCHOOLS
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe