Advertisment

பருவம் போனால் என்ன? படிப்போம் வாங்க...! - களைகட்டும் கற்றல் திருவிழா

tn school education scheme

கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் செயல்படுத்தப்படுவது பெற்றோர் மற்றும்கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

கொரோனா பெருந்தொற்று காலத்தில்இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால்மாணவர்களின் கல்வித்திறன் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் பல மாணவர்களுக்கு எழுத்துக்கள் மறந்துவிட்டன. அதுமட்டுமின்றி1 மற்றும்2 ஆம் வகுப்புகள் படிக்காமலேயே அனைவரும் தேர்ச்சி எனும் அடிப்படையில்3 ஆம் வகுப்புக்குச் சென்ற மாணவர்களும் இருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில், 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்,அடிப்படை கணிதத் திறனுடன்பிழையின்றி எழுதுவதையும்படிப்பதையும் உறுதி செய்யும் விதமாக 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் திருவிழா நடைபெற்றது.

அப்போதுபள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கற்றல் திறனை பல்வேறு வகையில் பெற்றோர்கள், பொதுமக்களிடையே வெளிப்படுத்தி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில்தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கீதா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சதீஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe