Skip to main content

வதந்தி; பாஜக நிர்வாகியை கைது செய்ய டெல்லி விரைந்த தனிப்டை!

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

tn Police rushed Delhi arrest BJP executive who spread rumors about North State workers

 

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழக முதல்வர் ஸ்டாலின், “புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள். வதந்தி பரப்புவோர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள். புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை தமிழர்களை விட புலம்பெயர் தொழிலாளர்கள் அழுத்தமாகச் சொல்வார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். 

 

இந்த நிலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹைதராபாத்தில் இரு நபர்களிடையே நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்த மோதலாக சித்தரித்து வதந்தி பரப்பியுள்ளார். இவர் பரப்பிய வதந்தி அடுத்தடுத்து பரப்பரப்பட்ட வதந்திக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் பிரசாந்த் உம்ராவை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்