தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm444.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கரோனா தடுப்பு நடவடிக்கையாகதமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவு இன்று (24/03/2020) மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின்கடைசி நாளான இன்று (24/03/2020) பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும். கரோனா நிவாரணத்திற்காகரூபாய் 3,250 கோடி ஒதுக்கீடு. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)