Advertisment

கரோனா தடுப்புப் பணிகளுக்கு அமைச்சர்கள் குழு!

coronavirus prevention tn ministers team

Advertisment

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தடுப்புப் பணிகளுக்காகஅமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நேற்று (09/05/2021) காலை 11.30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்திடவும், கரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும்கீழ்க்காணும் அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை மாவட்டத்திற்கு மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தா.மோ. அன்பரசன், சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு சா.மு. நாசர், மதுரை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஈரோடு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு அமைச்சர் ஆர். அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், திருச்சி மாவட்டத்திற்கு கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமைச்சர் எ.வ. வேலு, வேலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் துரைமுருகன், ஆர். காந்தி, விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

coronavirus prevention tn govt
இதையும் படியுங்கள்
Subscribe