Advertisment

அரசு பேருந்தை அசால்டாக இயக்கிய அமைச்சர்... ஆரவாரம் செய்த பொதுமக்கள்!

பரக

அரசு பேருந்தை அமைச்சர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அசால்டாக ஓட்டிச் சென்று அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், இன்று அனந்தவாடியில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு புதிய பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அவர், யாரும் எதிர்பாராத வகையில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கினார். இதனால் வண்டியில் இருந்தவர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர். சிலர் அமைச்சரைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதால் அவரை வண்டி ஓட்டிக் கொண்டே திரும்பச் சொன்னார்கள். போஸ் கொடுத்தால் வண்டியை எப்படி ஓட்டுவது என்று அவர் கேட்டது அருகில் இருந்த அனைவரும் சிரித்தனர். கூடுதல் பேருந்து கேட்டு நீண்ட நாட்களாகப் பொதுமக்கள் போராடியதாகவும் தற்போது அது கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அனந்தவாடி மக்கள் தெரிவித்தார்கள்.

Advertisment

Ariyalur ss sivasankar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe