/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/740_3.jpg)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசன் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பள்ளி கட்டிடதிறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பெண்ணாடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவில் பிரளயகாலேஸ்வரர், ஆமோதனாம்பாள் ஆலயம் இவ்வாலய இறைவனையும் இறைவியையும் வழிபடுவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
மேலும் 63 நாயன்மார்களில் கலிக்கம்ப நாயனார், மறைஞானசம்பந்தர் ஆகிய இருவரும் இந்த ஊரில் பிறந்து வாழ்ந்தவர்கள். இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என பெயர் வருவதற்கு காரணம், ஒரு முறை இந்த ஊருக்கு தென்பகுதியில் செல்லும் வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்தது மக்கள் தங்களை காப்பாற்றுமாறு ஆலயத்திற்கு ஓடி வந்து இறைவனிடம் கையேந்தி வேண்டி நின்றனர். அப்போது இறைவன் நந்தி பெருமானுக்கு ஊருக்குள் வரும் வெள்ளத்தை முழுவதையும் குடித்து விடும்படி ஆணையிட்டார். இதையடுத்து நந்தி-பெருமான் சிவபெருமானை நோக்கி மேற்கு முகமாக இருந்தவர், கிழக்கு நோக்கித் திரும்பி பெருகி வந்த அந்த வெள்ள நீரை உறிஞ்சினாராம். அந்த பிரளயத்தை காத்ததா ஆலய இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயர் வந்தது.
மேலும் இந்த ஆலயதிற்கு "கை வழங்கீயஈசன்" என்ற பெயரும் உண்டு. இதற்கு காரணம் கை, கால் உபாதை உள்ளவர்கள் செயல் இழந்தவர்கள் இவ்வாலயம் வந்து சிறப்பு வழிபாடு செய்பவர்களுக்கு நிவர்த்தியாகிறது என்ற பலத்த நம்பிக்கை உள்ளது. இக்கோயில் கடந்த இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படவில்லை. இதுகுறித்து சிவனடியார்கள் இப்பகுதி பக்தி மார்க்கத்தில் உள்ள பொதுமக்கள் ஆகியோர் அறநிலையத்துறைக்கு பலமுறை விண்ணப்பித்தனர். கோயில் புனரமைப்பு செய்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோரி இதனடிப்படையில் தொல்லியல் துறையினர் அனுமதியுடன் அறநிலையத்துறை கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக கோவில் நிதியாக அறநிலையத்துறை 39 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மற்றும் உபயதாரர்கள் 43 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 83 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பணிக்கான பாலாலய பூஜை நேற்று(27.5.2022) காலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் பேரூராட்சி சேர்மன் அமுத லட்சுமி ஆற்றலரசு, உதவி ஆணையர் சரவணன், விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார், கோயில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும் திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவுமான கணேசன் மற்றும் தருமபுர ஆதீனம் சட்டநாத தம்பிரான் சாமிகள் ஆகியோர் ஆலய பூஜை செய்து கோயில் திருப்பணிக்கான அடிக்கல் நாட்டி வைத்தனர்.இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/739_0.jpg)
இதையடுத்து திட்டக்குடி நகராட்சியில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதி திட்டத்தின் கீழ் அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டிட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மாணவ மாணவிகள் பள்ளியில் அமர்ந்து படித்து பயன்பெறும் வகையில் அந்த புதிய கட்டிடத்தையும் அமைச்சர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அடுத்து கூத்தப்பன் குடிக்காடு வசிஸ்டபுரம்., பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளையும் திறந்துவைத்தார், இதில் திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன், விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் சுகப்பிரியா, வட்டார கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சிவராமன் நகராட்சி தலைவர் வெண்ணிலா, கோதண்டம் மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் சுகுணா சங்கர், திட்டக்குடி நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Follow Us