Skip to main content

சுகாதாரத்துறை செயலாளர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்... தமிழக அரசு அதிரடி!

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

Many IAS officers, including the Health Secretary, have been transferred ... Tamil Nadu Government Action!

 

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் மருத்துவத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் புதிய மருத்துவ செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல்ஆனந்த் குமார் ஐஏஎஸ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த நிலையில், அவர் தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 

உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையராக தீராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுதுறை கூடுதல் தலைமைச் செயலாளராக நசிமுதின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையராக தரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை ஆணையராக நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு மாற்றப்பட்டு பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக சாந்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியராக இருந்த விஜயராணி சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு, ஆயத்தீர்வை ஆணையராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். உணவு பாதுகாப்பு ஆணையராக லால்வேனா  நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நகர்ப்புற மக்கள் வாக்களிக்கத் தவறிவிட்டனர் " - ராதாகிருஷ்ணன் ஆதங்கம் !

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Urban people have failed to vote says Radhakrishnan

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையை திறக்க இரண்டு  சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும். ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4% வாக்குப் பதிவு குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது" என்று கூறினார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.