TN HEALTH MINISTER VIJAYABASKAR PRESS MEET AT CHENNAI

Advertisment

கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாளை (02/01/2021) 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (02/01/2021) கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நாளை (02/01/2021) மொத்தம் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது. இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி ஒத்திகை பார்க்கப்படும். கரோனா தடுப்பூசி போட சுமார் 47,200 மையங்கள் தயாராகி வருகின்றன. கரோனா தடுப்பூசிக்கான பயிற்சிதொடர்ந்து வழங்கப்படுகிறது" என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சருடன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.