tn govt students medical seats reservation obc category supreme court judgement

Advertisment

மருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 15% மருத்துவ இடங்களில் 50% ஐ தமிழக ஓபிசி பிரிவினருக்கு தரக்கோரியும், இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தக் கோரியும் தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நாகேஷ்வர ராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று (26/10/2020) தீர்ப்பளித்தது. அதில், 'இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த கோரிய தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கை நிராகரித்து, இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது' என தெரிவித்துள்ளது.

Advertisment

நடப்பு ஆண்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு ஏற்கனவே உச்ச்நீதிமன்றத்தில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.