tn govt released gazette notification special fund rs 2000

Advertisment

நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்துள்ளவர்களுக்கு தலா ரூபாய் 2,000 சிறப்பு நிவாரண நிதி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூபாய் 2,000 சிறப்பு நிவாரண நிதி வழங்கப்படும். 6,810 கலைஞர்களுக்கு தலா ரூபாய் 2,000 வீதம் ரூபாய் 1.36 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரண தொகையாக இரண்டு முறைரூபாய் 1,000 நிதியை தமிழக அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.