Advertisment

தமிழக அரசின் அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

TN Govt Ordinance Interimly Banned by the High Court

Advertisment

தேசிய திறந்தநிலைப் பள்ளிச் சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் மூலம் செயல் பட்டு வருகிறது. இந்தக் கல்வி நிறுவனத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாண்வர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய சூழலில் அரசு வேலை வாய்ப்புகளில் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் அளிக்கும் சான்று செல்லாது எனத்தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி (21.12.2024) ஒரு அரசாணையை வெளியிட்டது.

இதனை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் விஷ்னு மற்றும் சந்தோஷ் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜீ.ஆர்.சாமிநாதன் முன்பு விசாரனை நடைபெற்று வந்தது. அந்த வகையில் இன்று (27.05.2024) விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து நீதிபதி தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவிற்கு தமிழக அரசு உரிய பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe