Advertisment

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

TN govt order Transfer of senior police officers 

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (25.03.2025) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக ஆர். சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை மாநகர வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக வி. பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து (கிழக்கு) பிரிவு காவல் துணை ஆணையராக எஸ். மெகலினா ஐடன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவலர்கள் நலத்துறை மற்றும் எஸ்டேன் பிரிவு துணை காவல் ஆணையராக டி.என். ஹரி கிரண் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர மயிலாப்பூர் துணை காவல் ஆணையராக வி.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக ஜவகர் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Erode transferred ips
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe