Advertisment

பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி விவகாரம்; ‘நடந்தது என்ன?’ - தமிழக அரசு விளக்கம்!

TN govt explanation about What happened in Ganesh Chaturthi pledge issue in schools

விநாயகர் சதுர்த்திதொடர்பாகப்பள்ளிகளில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் முற்றிலும் ரத்துசெய்யப்படுவதாகத்தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாகச்சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பல்வேறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

Advertisment

அதன்படி விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத பணிகள்தொடர்பாகப்பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென் மண்டலம்)வாயிலாகப்பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, தமிழ்நாடுமாசுகட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது. விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும்.

Advertisment

இந்த சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு இந்த விழா தொடர்பாக அறிவுறுத்தல் மற்றும் உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கைஅனுப்பியதற்குப்பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIRCULAR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe