Advertisment

“குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது” - அமைச்சர் ஐ.பெரியசாமி

tn govt is determined to solve the problems of drinking water and farmers

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள, பொன்னிமாந்துரை, அனுமந்தராயன் கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, கரிசல்பட்டி மற்றும் கசவனம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அலவாச்சிபட்டியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொன்னிமாந்துரை, அனுமந்தராயன் கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, கரிசல்பட்டி மற்றும் கசவனம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் அலவாச்சிபட்டியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பொன்னிமாந்துரை ஊராட்சியை பொறுத்தவரை ரூ.9.00 கோடி அளவிற்கு வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. ஊராட்சி என்று எடுத்துக்கொண்டால் அதில் பல உட்கிடை கிராமங்கள் உள்ளன. அனைத்துப்பகுதி கிராம மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்திட வேண்டும். அதற்காக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாற்றி அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் உள்ள வழிமுறைகளை ஆய்வு செய்து அதிலுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து எளிமைக்படுதிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்வது, அதற்குத் தண்ணீர் ஊற்றுவது, சாலைகள் சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒன்றிய அரசிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Advertisment

tn govt is determined to solve the problems of drinking water and farmers

அனுமதி கிடைத்தவுடன் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த செயல்பாட்டில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். ஜிஎஸ்டி போன்ற வரிப்பணத்திலிருந்து வரிபகிர்வு கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக ஆதாரத்துடன் ஒன்றிய நிதித்துறை ஆணையத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு வரி உயர்வு செய்யப்படவில்லை. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டும் ஒரு லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்படும்போது, 1.16 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டது. பின்னர் விடுபட்ட தகுதியான நபர்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றன.

தொடர்ந்து தகுதியுள்ள அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சி, மதம், ஜாதி என எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் எண்ணங்கள், வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் மக்களைச் சென்றடையச் செய்வதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் பொதுமக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe