TN govt announcement for Procurement of 3 thousand new buses

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் புதிய பேருந்துகளின் கொள்முதல் நிலை மற்றும் பழைய பேருந்துகளைப் புதுப்பித்தல் நிலை பற்றிய தகவலை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதில், “2022-23 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் 2 கொள்முதல் செய்ய ரூபாய் 420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 833 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 167 பேருந்துகள் நவம்பர் 2024க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் (SADP) கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

Advertisment

2023-24 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 888 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 112 பேருந்துகள் நவம்பர் 2024க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். 2024-25 ஆம் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 1535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 503 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி நிர்ணய ஆணை வழங்கப்பட்டு நவம்பர் 2024க்குள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும். மேலும் 2 ஆயிரத்து 544 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

Advertisment

TN govt announcement for Procurement of 3 thousand new buses

ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி (KfW) உதவியோடு மொத்தம் 2 ஆயிரத்து 166 பிஎஸ் - 4 (BS-VI) டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இதில் 552 தாழ்தளப் பேருந்துகளுக்குக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு 59 தாழ்தள பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 493 பேருந்துகள் நவம்பர் 2024க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். மேலும், 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 500 மின்சார பேருந்துகளுக்கு ஒப்பந்தப்புள்ளி தயார் செய்யப்பட்டு ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியின் ஒப்பந்தப் புள்ளி ஒப்புதலுக்குப் பிறகு கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உலக வங்கி உதவியுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஜிசிசி (GCC) அடிப்படையிலான 500 மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு விலைப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளன. விரைவில் பணி ஆணை வழங்கப்படும். கடந்த 23 ஆம் தேதி (23.08.2024) வரை, 3 ஆயிரத்து 71 புதிய பேருந்துகளுக்குக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, இது வரை 1,796 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Advertisment

2022-23 ஆம் நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்க ரூபாய் 154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 910 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்க ரூபாய் 76.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 154 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 1,500 பேருந்துகளில் 23 ஆம் தேதி வரை அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.