Published on 08/04/2021 | Edited on 08/04/2021

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சார் பதிவாளரை மீண்டும் சார் பதிவாளராக நியமித்ததை எதிர்த்து 'கருப்பு எழுத்துக் கழகம்' என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, இன்று (08/04/2021) விசாரணைக்கு வந்தபோது விசாரித்த நீதிபதிகள், புற்றுநோயாக ஊழல் நம்மைக் கொல்கிறது; நில அபகரிப்பு நடக்கிறது, நீர்நிலைகள் மாயமாகின்றன. லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படுகிறதா? கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை கையாண்டுள்ளது? என்று அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினர். அதையடுத்து, மூன்று வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.