தமிழகத்தில் அனைத்துத்துறை அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தி, கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது. உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனமும், அதிருப்தியும் கிளம்பி இருக்கின்றன. ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க போதுமான நிதி ஆதாரம் இல்லாததால்தான் இத்தகைய முடிவை அரசு எடுத்திருப்பதாகவும், அரசுக்கு நிர்வாகத்திறமை இல்லை என்றும் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எப்ஐ) அரசின் முடிவைக் கண்டித்து, வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் புதன்கிழமை (மே 13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலத்தில், சாமிநாதபுரம், சின்னேரி வயல் காடு, ஆலமரத்துக்காடு, அங்கம்மாள் காலனி, மெய்யனூர், அழகாபுரம், பெரமனூர் ஆகிய பகுதிகளில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அமைப்பின் கொடிகளை ஏந்தியும், வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
'தமிழக அரசே ஓய்வு பெறும் வயதை நீட்டிக்காதே', 'இளைஞர்களுக்கு வேலை கொடு' என்று முழக்கமிட்டனர். படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுவதை உணர்த்தும் வகையில் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டியிருந்தனர். கரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக முகக்கவசம் அணிந்தும், சமூக விலகலைப் பின்பற்றியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.