கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் 21 நாட்களுக்குஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போதும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்டவை கிடைக்க நியாய விலைக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இவ்வாறு ஊரடங்கின்போது பணியாற்றும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இந்நிலையில் ஊரடங்கின்போது பணியாற்றும் நியாய விலைக் கடை ஊழியர்களில், விற்பனையாளர்களுக்கு தலா ரூ.2,500 மற்றும் உதவியாளருக்கு தலா ரூ.2,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசுஅரசாணை வெளியிட்டுள்ளது.