Advertisment

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனு!

tn former minister chennai high court

பாலியல் வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுகவைச் சேர்ந்தவரும், தமிழக முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், "மருத்துவ உதவிக்காக தான் தந்த ரூபாய் 5 லட்சத்தைத் திருப்பிக் கேட்டால் தன்னை மிரட்டுவதாகவும், பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது புகார் அளித்ததாகவும், மலேசியாவில் இதுபோல் நடிகை மோசடி செய்ததாகவும்" குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisment

இதனிடையே, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை விசாரணை செய்வதற்காகவும், ஆதாரங்களைத் திரட்டுவதற்காகவும் தனிப்படையினர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் தலைமறைவாகியுள்ளார். அவரை தீவிரமாகத் தேடிவரும் நிலையில், முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

chennai high court manikandan former minister admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe