Advertisment

பின்லாந்து நாட்டில் கூடைப்பந்து விளையாடிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! (படங்கள்).

பின்லாந்து நாட்டில் கூடைப்பந்து விளையாடிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

Advertisment

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 7 நாள் அரசு முறை பயணமாக பின்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரபல கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்தித்து கற்றல், கற்பித்தல் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். மேலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை வழங்கும் வகையில், பின்லாந்து நாட்டில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் பற்றி வல்லுனர்களுடன் கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக பின்லாந்து வாழ் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

Advertisment

மேலும் பின்லாந்து நாட்டில் உள்ள முன்னணி கார் நிறுவனங்களின் தொழிற்சாலையை பார்வையிட்டார். இந்நிலையில், அந்த நாட்டில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூடைப்பந்து விளையாடினார். இதற்கு முன்பாக அவர், மியூசிக் " கீபோர்டு" இசை கருவியை இசைத்து மகிழ்ந்தார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ARRIVE AT FINLAND minister sengottaiyan Tamilnadu valley ball
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe