முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு; நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

TN CM stalin is not well and Doctors insist him to take rest

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்த சூழலில், அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதால் அந்நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு முதல்வர், நாளை (20.06.2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21.06.2022) வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில் மாண்புமிகு முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுக்கின்றன. இவற்றிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe