தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மூன்று ஆண்டை கடந்து 4- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையடுத்து சாதனை மலர், குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (17/02/2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி மூன்று ஆண்டு சாதனை மலர் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டார். இந்த நிகழச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கடம்பூர் ராஜு, எஸ்.பி வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, காமராஜ், பாண்டியராஜன், விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமை செயலாளர் சண்முகம் உள்பட பல முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Advertisment

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 2017- ஆம் ஆண்டு பிப்ரவரி 16- ஆம் தேதி தமிழகத்தின் 13- வது முதல்வராக பழனிசாமி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.