இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 23 பேரில் ஏற்கனவே ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மதுரையில் ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில் கரோனா தடுப்பு தொடர்பாக இன்றிரவு 07.00 மணிக்கு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார். தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தருவது குறித்து முதல்வர் பேசுகிறார். ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார்.
நாட்டு மக்களிடம் பிரதமர் இரண்டு முறை பேசிய நிலையில் தமிழக மக்களிடம் முதன் முறையாக முதல்வர் பழனிசாமி பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.