Published on 23/12/2020 | Edited on 23/12/2020

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் டிசம்பர் 28- ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றியும், தளர்வுகளுடன் கூடிய கரோனா பொது முடக்கம் டிசம்பர் 31- ஆம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா? அல்லது மேலும் தளர்வுகளை அளிக்கலாமா? என்பது குறித்தும் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் கூறுகின்றன.